Thursday, November 5, 2009

சச்சின் சாதனையா? வேதனையா?


உலக சாதனைகளின் நாயகனின் அடுத்த சாதனை நிறைவேறியது.. வாழ்த்துக்கள் ஆனால் சச்சின் நேத்து நிஜமாக தோற்று போனதை எல்லோரும் பார்த்தோம். மிக அனாயசமாக சமீபத்தில் யாருமே ஆஸ்திரேலியாவை இப்படி அலைகழித்தது இல்லை, என்ற ஆணவம் (மன்னிக்க சச்சின் ரசிகர்கள் ) ஒரு கணம் சச்சினிடம் வெளிப்பட்டது. அதுவே அவர் அவுட் ஆக காரணம் மிக ஆணவமாக அவர் எதிர் கொண்ட பந்தை அடித்தார் அது அவுட் ஆக்கும் பந்து தான் என தெரிந்தும் ஆறு அடிக்க எத்தனித்தார்.. ஒரு சிறு அணியின் முழு ரன்களை தனிமனிதராக எடுத்திருக்கும் சச்சினுக்கு தெரியாத அந்த பந்தின் வலிமை?
விளைவு அவர் சதம் அவருக்கு மட்டுமே பெருமை சேர்த்தது இந்திய தோற்றது
சச்சின் சாதனைக்கு இந்த மேட்ச் ஒரு கரும்புள்ளி என்பதில் சந்தேகமில்லை. சச்சின் சாதனையா வேதனையா?

Monday, November 2, 2009

கண்டேண் (முற்போக்கு சிந்தனை) காதலை


நான் இந்த படத்தினை விமரிசிக்க வரவில்லை.. இயக்குனரின் முற்போக்கு சிந்தனைக்கு ஒரு சபாஷ் சொல்லவருகிரேன்.. ஒரு காட்சியில்.. பரத்தின் அம்மா அவரின் அப்பா இறந்த பின் வேறுதுனை தேடியது பரத்தின் மனதை பாதித்ததாக தமண்ணாவிடம் சொல்லி வருந்துகிறார். அது அவரின் வாழ்க்கை..உன் அப்பாவிடம் இழந்த ஏதோ ஒன்று அவரின் புதுவாழ்க்கையில் அவருக்கு கிடைப்பது நீ எப்படி தவறாக நினைக்க முடியும் எனும் நோக்கில் அதுவும் ஒரு பெண் மூலமாகவே சொல்லி இருப்பது.. பத்தாம் பசலி தன்மான பழைய வாழ்க்கை முறைக்கு மணி அடித்த இயக்குனர் உண்மையில் பலசாலி தானே.. வாழ்க அவரின் முற்போக்கு சிந்தனை.. அவர் அம்மாவை மறுபடியும் அம்மாவாகவும் கம்பெனி இயக்குனராகவும் பரத் ஏற்றுக் கொள்வது மிக அருமை..
இது போன்ற முயற்சிக்கு தயவு செய்து ஊக்கம் கொடுங்கள்..